ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பென்சன் சட்டம் அனுமதித்துள்ள குறைந்த பட்ச ஓய்வூதிய தொகை ரூ.7,850 வழங்க வேண்டும். வருவாய் கிராம உதவியாளர் ஓய்வுக்குப்பின் பெற்று வரும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பணிப்பலன்கள் அனைத்தும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர் இறந்தால் குடும்ப நலநிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story