ரே‌ஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு முறைகேடுகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு அபராதம்


ரே‌ஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு முறைகேடுகளில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 6 July 2018 2:30 AM IST (Updated: 6 July 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முறைகேடுகளை கண்டுபிடித்து பணியாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முறைகேடுகளை கண்டுபிடித்து பணியாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

அதிகாரிகள் திடீர் ஆய்வு

நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் (பொறுப்பு) குருமூர்த்தி உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட துணை பதிவாளர் ரியாஜ் அகமது தலைமையில் அதிகாரிகள் குழுவினர் மாவட்டத்தில் உள்ள 82 ரே‌ஷன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது 43 கிலோ அரிசி, 70½ கிலோ சீனி, 12 லிட்டர் மண்எண்ணெய், 19 கிலோ கோதுமை, 38½ கிலோ துவரம் பருப்பு, 49 லிட்டர் பாமாயில், 385 தேயிலை பாக்கெட்டுகள், 449 உப்பு பாக்கெட்டுகள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறைவு ஏற்படுத்தியதும், போலிப்பதிவு மூலம் விற்பனை செய்து இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது. மேலும் சில கடைகளில் கூடுதல் இருப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அபராதம் விதிப்பு

இவ்வாறு ரூ.23 ஆயிரத்து 145–க்கு முறைகேடுகள் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதற்கு காரணமான பணியாளர்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் ‘‘பாயிண்ட் ஆப் சேல்’’ என்ற எந்திரங்கள் மூலம் விற்பனை பட்டியல் போடப்படுவதால் போலி விற்பனை பதிவு செய்யும் பணியாளர்கள் மீதும், குடிமை பொருள் வினியோகத்தில் தவறு செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.

இந்த தகவலை நெல்லை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் (பொறுப்பு) குருமூர்த்தி தெரிவித்து உள்ளார்.


Next Story