ஆவின் பொருட்களை விற்பனை செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் ஆவின் பொருட்களை விற்பனை செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
மானியம்தமிழக முதல்–அமைச்சர் சட்டசபையில் 110–ன் விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், ஆவின் நிறுவனத்தின் மூலம் தயார் செய்யப்படும் பால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆவின் நிறுவனத்திடம் ஒப்புதல் பெற வேண்டும், வங்கிகளிடம் இருந்து கடன் வழங்கிட ஒப்புதல் பெறப்பட வேண்டும், கடை வைக்க சொந்த இடமாகவோ அல்லது வாடகை இடமோ இருத்தல் வேண்டும். ஏற்கனவே வங்கி கடன் பெற்று இருக்கக்கூடாது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்ஆவின் பொருட்கள் விற்பனை கடை அமைக்க விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் மேலே குறிப்பிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தகுதியானவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.