சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு விவகாரம்: சமூக வலைதளங்களில் கவர்னர் கிரண்பெடி பதிவு
சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று வெளியான செய்திகளை சமூக வலைதளங்களில் கவர்னர் கிரண்பெடி பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
டெல்லி யூனியன் பிரதேச கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது எனவும், அவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினை புதுச்சேரி முதல்-அமைச்சர் நாரயாணசாமி வரவேற்றுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பு புதுச்சேரி மட்டுமல்லாது இந்தியா முழுவதற்கும் பொருந்தும் என்றும் கருத்து தெரிவித்தார். ஆனால் கவர்னர் கிரண்பெடி தீர்ப்பு குறித்து நேரடியாக தனது சொந்த கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அதேநேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகளை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தண்ணீர், பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தூய்மை மற்றும் கல்வி ஆகிய அனைத்திலும் வளமான புதுச்சேரியை உருவாக்க பாடுபட வேண்டும். புதுச்சேரி இயற்கை அளித்த பரிசு. இங்குள்ள மக்கள் மரியாதைக்குரியவர்கள் என்று அதில் கிரண்பெடி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story