கனரக வாகனங்களின் பின்புறம் தடுப்புகள் அமைக்காவிட்டால் உரிமம் ரத்து ஆர்.டி.ஓ. தகவல்


கனரக வாகனங்களின் பின்புறம் தடுப்புகள் அமைக்காவிட்டால் உரிமம் ரத்து ஆர்.டி.ஓ. தகவல்
x
தினத்தந்தி 6 July 2018 4:00 AM IST (Updated: 6 July 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

கனரக வாகனங்களின் பின்புறம் தடுப்புகள் அமைக்கா விட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆர்.டி.ஓ. சம்பத் தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி ஆர்.டி.ஓ. சம்பத் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் பழுதடைந்து சாலையோரம் நின்று விட்டால் அல்லது அதிவேகமாக சென்று திடீரென பிரேக் பிடித்தால் பின்னால் வரும் கார் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் கனரக வாகனங்களின் பின்புறம் மோதுவதால் வாகனங்கள் லாரிக்கு அடியில் செல்லும் வாய்ப்பும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் கனரக வாகனங்களுக்கு பின்புறம் இரும்பு கம்பியால் தடுப்புகள் அமைக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அந்த வாகனங்களை புதுப்பிக்கும் உரிமை கோரும் போது அதன் உரிமம் ரத்து செய்யப்படும்

தற்போது வரும் புதிய கனரக வாகனங்களில் அதுபோல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.


மேலும் நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதில் 20 வாகனங்களுக்கு அபராத தொகையாக ரூ.18 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் 3 மாதம் தடை செய்யப்படும் தொடர்ந்து சிக்கும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story