மதுராந்தகம் அருகே கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி சாவு


மதுராந்தகம் அருகே கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 6 July 2018 5:00 AM IST (Updated: 6 July 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மதுராந்தகம்,

மதுராந்தகத்தை அடுத்த பாக்கத்தில் கூடுவாஞ்சேரியை சேர்ந்த சந்திரன் கல்குவாரி நடத்தி வருகிறார். இங்கு கற்களை உடைக்க வெடி வைக்கும்போது அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இது குறித்து தாசில்தார், ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் நேற்று கல்குவாரி வெடி விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளியான நெல்லை மாவட்டம் பனங்குடியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 55) உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து இசக்கி முத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். கல்குவாரி உரிமையாளரான சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story