கனமழை காரணமாக மும்பை- கோவா நெடுஞ்சாலையில் நிலச்சரிவு வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு
கனமழை காரணமாக மும்பை- கோவா நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மும்பை,
கனமழை காரணமாக மும்பை- கோவா நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நிலச்சரிவு
மராட்டியத்தில் பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு கனமழை காரணமாக மகாட் அருகே உள்ள கெம்புருலி கிராமத்தில் உள்ள மும்பை- கோவா நெடுஞ்சாலையில் அதிகாலை 5 மணியளவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் சேறும், சகதியுமாக சாலையில் குவிந்த மண் அதன் 2 பாதைகளையும் மூடியது.
நிலச்சரிவின் போது, அதிர்ஷ்டவசமாக அந்த சாலை வழியாக வாகனங்கள் எதுவும் செல்லவில்லை.
அணிவகுத்து நின்ற வாகனங்கள்
இந்தநிலையில், அந்த வழியாக 2 மார்க்கத்திலும் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்து மகாட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சாலையின் குறுக்கே குவிந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மதியத்துக்கு பின்னர் தான் முழுவதுமாக மண் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story