அந்தேரி மேம்பால விபத்தில் காயமடைந்த பயணி ரூ.1 லட்சம் இழப்பீட்டை வாங்க மறுப்பு


அந்தேரி மேம்பால விபத்தில் காயமடைந்த பயணி ரூ.1 லட்சம் இழப்பீட்டை வாங்க மறுப்பு
x
தினத்தந்தி 6 July 2018 4:15 AM IST (Updated: 6 July 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரி மேம்பால விபத்தில் காயமடைந்த பயணி ரெயில்வே வழங்கிய ரூ.1 லட்சம் இழப்பீட்டை வாங்க மறுத்துவிட்டார்.

மும்பை, 

அந்தேரி மேம்பால விபத்தில் காயமடைந்த பயணி ரெயில்வே வழங்கிய ரூ.1 லட்சம் இழப்பீட்டை வாங்க மறுத்துவிட்டார். அந்த பணத்தை தேவையான வர்களுக்கு கொடுத்து உதவுங்கள் என கூறியுள்ளார்.

இழப்பீடு வேண்டாம்

மும்பை அந்தேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை ரெயில்வே நடை மேம்பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரெயில்வே சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ரெயில்வே அறிவித்த இழப்பீடு தனக்கு வேண்டாம் என அந்தேரி விபத்தில் காயமடைந்த வெர்சோவா பகுதியை சேர்ந்த ஹரிஷ் கூறியுள்ளார்.

சம்பவத்தன்று அந்தேரி ரெயில்நிலையம் 1-வது பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் நடந்து சென்ற இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதனால் பயணிகள் பதற்றத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். அப்போது சில பயணிகள் தள்ளியதில் ஹரிஷ் பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்தார். இதில் அவரது இடது கை முறிந்து படுகாயம் ஏற்பட்டது.

தேவையானவர்களுக்கு உதவுங்கள்

இது குறித்து ஹரிஷ் கூறும்போது:-

நான் நடைமேம்பால இடிபாடுகளில் சிக்கி காயமடையவில்லை. எனவே ரெயில்வேயின் இழப்பீட்டை வாங்க மறுத்துவிட்டேன். எனக்கு தர இருந்த ரூ.1 லட்சத்தை தேவையா னவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். நான் மருத்துவ காப்பீடு செய்துள்ளேன். எனவே அதை வைத்து சிகிச்சை பெற்று கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story