ஜூகு கடலில் 5 பேர் மூழ்கினர்; ஒருவர் உயிருடன் மீட்பு 4 பேரை தேடும் பணி தீவிரம்


ஜூகு கடலில் 5 பேர் மூழ்கினர்; ஒருவர் உயிருடன் மீட்பு 4 பேரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 July 2018 4:15 AM IST (Updated: 6 July 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

ஜூகு கடலில்குளித்த5 பேர்ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட் டனர். இதில்,ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.

மும்பை, 

ஜூகு கடலில்குளித்த5 பேர்ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட் டனர். இதில்,ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலில் மூழ்கினர்

மும்பை அந்தேரி டி.என். நகரை சேர்ந்தவர் பர்தீன் சவுதாகர் (வயது17). இவர் தனது நண்பர்களான பைசல் சேக்(17), சோகைல், நசீர் காஜி, வாசிம் கான்(22) ஆகியோ ருடன் ஜூகு கடற்கரைக்கு சென்றார். அங்கு கடலில் இறங்கி 5 பேரும் உற்சாகமாக குளித்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை நண்பர்கள் 5 பேரையும் வாரி சுருட்டி உள்ளே இழுத்து சென்றது. இதில் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உதவிகேட்டு கூச்சலிட்டனர்.

இதை கவனித்த உயிர்காக்கும் வீரர்கள் அவர்களை மீட்பதற்காக கடலில் குதித்தனர்.

தேடும் பணி தீவிரம்

அவர்கள் வாசிம் கானை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 4 பேரையும் வெகுநேரமாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story