மாவட்ட செய்திகள்

பெரம்பலூர்-அரியலூரில் கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் + "||" + Perambalur Ariyalur All trade union federations have demonstrated the co-operative fair price shop

பெரம்பலூர்-அரியலூரில் கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்-அரியலூரில்
கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்-அரியலூரில் தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட கூட்டமைப்பு சார்பாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். செயலாளர் மேகநாதன், பொருளாளர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக பொது வினியோக திட்டத்திற்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாத்திட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் படி நியாய விலை கடை ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் சரக்கு இருப்பு குறைவிற்கு ஊழியர்களிடம் அபராத தொகை வசூல் செய்வதை கைவிட வேண்டும். ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும். குடும்ப அட்டைகளுக்கு மாறாக வழங்கப்பட்டுள்ள மின்னணு அட்டைகளில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும். நியாய விலைக் கடைகளில் அடிப்படை வசதிகளான குறிப்பாக கிடங்கு வசதி, மின் இணைப்பு, கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்பிடும் போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை பெற்று பணியமர்த்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கருப்பையா, விருதகிரி, பொன்னுசாமி, ராஜாராம், நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் சம்பந்தம் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நியாய விலைக்கடை ஊழியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வாட்சன் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னிமலையில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னிமலையில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம், மக்கள் மன்றம் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. கருவடிக்குப்பத்தில் மதுபான, சாராயக் கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
கருவடிக்குப்பத்தில் மதுபான, சாராயக்கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. விசாரணை என்கிற பெயரில் மயக்க ஊசி போட்டு துன்புறுத்தியதாக வனத்துறையினரை கண்டித்து மலை வாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
விசாரணை என்கிற பெயரில் மயக்க ஊசி போட்டு துன்புறுத்தியதாக வனத்துறையினரை கண்டித்து பொள்ளாச்சியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டம்
5. மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.