கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்


கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 July 2018 10:15 PM GMT (Updated: 6 July 2018 7:27 PM GMT)

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குளித்தலை,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குளித்தலை வட்டார கிளையின் பொதுக்குழு கூட்டம் குளித்தலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். இக்கூட்டணியின் மாவட்ட தலைவரும், குளித்தலை வட்டார செயலாளருமான மணிகண்டன் வரவேற்று தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். இக்கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் ஏகமனதாக ஏற்பு செய்தல், 2018-19-ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை வருகிற 15-ந் தேதிக்குள் முடித்து ஒப்படைக்கவேண்டும்.


5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி மாலை கரூரில் நடைபெறும் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குளித்தலை வட்டார கிளை சார்பில் அதிகப்படியான ஆசிரியர்கள் பங்கேற்கவேண்டும். வருகிற 23-ந் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கோட்டையை நோக்கி நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் குளித்தலை வட்டாரத்தின் சார்பில் 20 இயக்க ஆசிரியர்கள் பங்கேற்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், குளித்தலை வட்டார செயற்குழு உறுப்பினர்கள் கோமதி, கீதா, சித்ராதேவி, அம்பிகா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் தேக்கமலை நன்றி கூறினார்.

Next Story