பராமரிப்பு பணி காரணமாக திருச்சியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பராமரிப்பு பணி காரணமாக திருச்சியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 July 2018 11:15 PM GMT (Updated: 6 July 2018 8:11 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக திருச்சியில் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி,

திருச்சி இ.பி.சாலை துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி இ.பி.சாலை, மணிமண்டப சாலை, காந்திமார்க்கெட், கிருஷ்ணாபுரம் சாலை, ஆண்டாள் தெரு, சின்னகடை வீதி, பெரியகடை வீதி, தேவதானம், மதுரம் மைதானம், பாரதியார் தெரு, ஆண்டாள் தெரு, பட்டவர்த் சாலை, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ரெயில்நிலைய பகுதி, விஸ்வாஷ் நகர், ஏ.பி.நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என திருச்சி மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதேபோல அம்மாப்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ராம்ஜிநகர், கள்ளிக்குடி, அரியாவூர், நவலூர்குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, புதுக்குளம், பூலாங்குளத்துப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், புங்கனூர், வெள்ளிவாடி, ஆலம்பட்டிபுதூர், சித்தாநத்தம், வடசேரி, கரையான்பட்டி, சமுத்திரம், இடையாப்பட்டி, மரவனூர், சுண்ணாம்புகாரன்பட்டி, தாயனூர், வயலூர், அதவத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

அம்பிகாபுரம் துணை மின்நிலைய பகுதிகளான அரியமங்கலம், நேருஜிநகர், எஸ்.ஐ.டி., பொன்மலை ராணுவ காலனி, கீழ அம்பிகாபுரம், வெங்கடேஷ்வராநகர், எம்.ஜி.ஆர்.நகர், மேல அம்பிகாபுரம், அண்ணாநகர், கோல்டன் நகர், காவேரிநகர், ஆண்டாள் நகர், ராஜப்பா நகர், ரெயில் நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், காட்டூர், பாப்பாகுறிச்சி, கைலாஷ்நகர், பாலாஜி நகர், சக்திநகர், மேல கல்கண்டார்கோட்டை, கீழ கல்கண்டார்கோட்டை, கீழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி, ஆலத்தூர், திருநகர், அடைக்கல அன்னை நகர், பொன்னேரிபுரம், பொன்மலைப்பட்டி ஒரு பகுதி, சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மன்னார்புரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story