மாவட்ட செய்திகள்

நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் கிராம நிர்வாக அலுவலர் பலி மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம் + "||" + Motorcycle clash on the tractor standing Rural Admin Officer killed Worker was injured in another accident

நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல் கிராம நிர்வாக அலுவலர் பலி மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம்

நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்
கிராம நிர்வாக அலுவலர் பலி
மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம்
நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கிராம நிர்வாக அலுவலர் பலியானார். மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ராசிகுமரிப்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தாகவுண்டர். இவருடைய மகன் ராஜசேகர்(வயது 31). இவர் மோகனூர் அருகே உள்ள பேட்டைப்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பரமத்தி வேலூரில் இருந்து மோகனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஓலப்பாளையம் அருகே சென்ற போது சாலையோரத்தில் நின்றிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிளுடன் மோதினார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் இறந்த கிராம நிர்வாக அலுவலருக்கு மதுமதி என்ற மனைவியும், ரித்திகா என்ற ஒரு வயது குழந்தையும் இருக்கிறார்கள்.


பரமத்திவேலூர் அருகே ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி(40). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பரமத்திவேலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு செல்லும் போது ஓலப்பாளையத்தில் சாலையோரத்தில் நின்றிருந்த அதே டிராக்டரில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2 விபத்துகளையும் பரமத்திவேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் இன்சூரன்சு நிறுவனத்தில் ஜப்தி
விபத்தில் படுகாயமடைந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்காததால் இன்சூரன்சு நிறுவனத்தின் பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
2. வெளிநாட்டில் வேலை செய்து விடுமுறையில் வந்திருந்த போது விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
வெளிநாட்டில் வேலை செய்து விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது விபத்தில் சிக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.23 லட்சத்து 98 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
3. ஆம்பூரில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
ஆம்பூரில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. மோட்டார் சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதல் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு
ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிளும், சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் இறந்தார்.
5. உளுந்தூர்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; விவசாயி பலி
உளுந்தூர்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.