மாவட்ட செய்திகள்

நுங்கம்பாக்கம் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது + "||" + Two persons arrested for prostitution at Nungambakkam beauty center

நுங்கம்பாக்கம் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது

நுங்கம்பாக்கம் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய 2 பேர் கைது
நுங்கம்பாக்கம் அழகு நிலையத்தில் விபசாரம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை போலீசார் மீட்டனர்.
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெரு சுப்ராயன் தெரு சந்திப்பில் பெண்களுக்கான அழகு நிலையம் ஒன்று செயல்படுகிறது. அந்த அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்த அழகு நிலையத்தில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள்.

3 பெண்கள் மீட்பு

அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. அங்கிருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். அழகு நிலையத்தில் விபசாரம் நடத்தியதாக கணபதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அழகு நிலையத்தின் உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.