கோபி வேளாண்மை விரிவாக்க மையத்தில் 45 டன் விதை நெல் வினியோகிக்க தயார் அதிகாரி தகவல்


கோபி வேளாண்மை விரிவாக்க மையத்தில் 45 டன் விதை நெல் வினியோகிக்க தயார் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 7 July 2018 3:58 AM IST (Updated: 7 July 2018 3:58 AM IST)
t-max-icont-min-icon

கோபி வேளாண்மை விரிவாக்க மையத்தில் 45 டன் விதை நெல் வினியோகிக்க தயாராக வைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்து உள்ளார்.


கோபி,

கோபி வேளாண்மை உதவி இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமோக நெல் விளைச்சலில் தமிழக அரசு விதை சான்று துறையின் கீழ் சான்று பெற்ற தரமான விதைகள் முக்கிய பங்காற்றுகின்றன. நெல் மகசூல் அதிகரிக்க குறைந்தது 80 சதவீத முளைப்புத்திறன் கொண்ட வளமான நாற்றுகளை உருவாக்கும் தன்மை கொண்ட விதைகள் அவசியமாகும்.

சான்று பெற்ற விதைகளில் இத்தகைய குணநலன்கள் அடங்கியுள்ளன. எனவே வரும் பருவத்துக்காக பல்வேறு ரகங்களை கொண்ட 45 டன்களுக்கும் அதிகமான விதை நெல் கோபி வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்க தயாராக உள்ளது.

இந்த விதைகளுக்கு விதை கிராமத்திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழ் 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் காற்றிலுள்ள தழைச்சத்துக்களை ஈர்த்து பயிர்களுக்கு கொடுக்கும் தன்மை கொண்ட அசோஸ் பைரில்லம் மற்றும் மணிச்சத்தை பயிருக்கு கிடைக்க செய்யும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களும் தேவையான அளவு இருப்பில் உள்ளன. எனவே விவசாயிகள் உடனடியாக கோபி வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Next Story