கும்மிடிப்பூண்டி அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு


கும்மிடிப்பூண்டி அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 7 July 2018 3:45 AM IST (Updated: 7 July 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பஞ்செட்டி காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 45). வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டார். மஞ்சுளா, தனது வீட்டின் முன்பு சுவர் ஒன்றில் பொருத்தப்பட்டு உள்ள இரும்பு கொக்கியில் மாடுகளை எப்போதும் கட்டி வைப்பது வழக்கம்.

  நேற்று அந்த சுவர் அருகே மஞ்சுளா நின்று கொண்டிருந்த போது,  சுவர் கொக்கியில் கட்டப்பட்டிருந்த மாடு ஒன்று இழுத்துக்கொண்டு ஓடியது. இதனையடுத்து அந்த  சுவர் இடிந்து கீழே விழுந்தது.

சாவு 

இடிந்து விழுந்த சுவரின் இடிபாடுகளில் சிக்கிய மஞ்சுளா, பலத்த காயம் அடைந்த நிலையில் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story