மது அருந்தியதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவிய விவகாரம்: பேரூராட்சி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம்
மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேரத்தில் ஊழியர்கள் மது அருந்துவதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவியதை தொடர்ந்து 3 ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் செயல் அலுவலர் அறையில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 5 பேர் மது அருந்தினர். இதை அப்பகுதி மக்கள் பார்த்து செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மது அருந்தியது உறுதியானது.
பணி இடைநீக்கம்
இது குறித்து பேரூராட்சி உதவி இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், அலுவலக அறையில் மது அருந்தியதாக வாட்ஸ்-அப்பில் வீடியோ பரவிய விவகாரத்தில் தொடர்புடைய பேரூராட்சி ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய தற்காலிக பணியாளர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story