சத்ரபதி சிவாஜி சிலை முன்பு அமர்ந்து எடுத்த படத்தால் சர்ச்சை நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு, பா.ஜனதா எம்.பி. கண்டனம்
சத்ரபதி சிவாஜியின் சிலை முன்பு அமர்ந்தபடி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் எடுத்து வெளியிட்ட படத்திற்கு பா.ஜனதா எம்.பி. சாம்பாஜி சத்ரபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பை,
சத்ரபதி சிவாஜியின் சிலை முன்பு அமர்ந்தபடி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் எடுத்து வெளியிட்ட படத்திற்கு பா.ஜனதா எம்.பி. சாம்பாஜி சத்ரபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
படத்துக்குஎதிர்ப்பு
இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், மும்பை அருகே ராய்காட் பகுதியில் உள்ள சிவாஜி சிலை முன் அமர்ந்து எடுத்துக்கொண்ட படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், “இந்தியாவின் தலைசிறந்த வீரரான சத்ரபதி சிவாஜி மகராஜ் அருகில் இருக்கும்போது, நம்பமுடியாத உயரத்தை அடைந்ததாக உணர்கிறேன். தலைவணங்கி, அவரின் ஆசிர்வாதத்தை பெறுவதை விட மகிழ்ச்சி ஏதும் கிடையாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அவரின் புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
கண்டனத்துக்குஉரியது
குறிப்பாக பா.ஜனதா எம்.பி. சாம்பாஜி சத்ரபதி, நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சில பிரபலங்கள் சத்ரபதி சிவாஜியின் அரியணையில் அமர்ந்தபடி போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இது கண்டனத்திற்கு உாியது. அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே எதிர்ப்புகள் வலுத்த நிலையில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தான் வெளியிட்ட படத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “நாங்கள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அங்கு அமர்ந்து படம் எடுக்கவில்லை. இதனால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story