வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சரி சமமான தொகுதிகளில் போட்டியிட முடிவு


வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சரி சமமான தொகுதிகளில் போட்டியிட முடிவு
x
தினத்தந்தி 7 July 2018 5:00 AM IST (Updated: 7 July 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சரி சமமான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை, 

வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சரி சமமான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராகுல், சரத் பவார் சந்திப்பு

மராட்டியத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது 2 பேரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாகவும், மராட்டியத்தில் 2 கட்சிகளும் சரி சமமாக தொகுதிகளை பிரித்து போட்டியிட ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு முன் 1999-ம் ஆண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சரி சமமாக தொகுதிகளை பிரித் துக்கொண்டு மராட்டிய சட்டசபை தேர்தலை சந்தித்தன.

சரி சமமான தொகுதி

மராட் டியத்தில் 48 நாடா ளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 10 தொகுதி களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத் துவிட்டு, 2 கட்சிகளும் தலா 19 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேபோல சட்டமன்ற தேர்தலிலும் இந்திய குடியரசு கட்சி (காவய்), சுவாபிமான் பக்சா, பகுஜன் விகாஸ் அகாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, இந்திய குடியரசு கட்சி(அம்பேத்கர்) ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது போக மீதம் உள்ள இடங்களில் 2 கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

ராம்தாஸ் அத்வாலேயை இழுக்க முயற்சி?

இதேபோல தற்போது பா.ஜனதாவுடன் கூட்டணில் உள்ள ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இழுக்கும் முயற்சி நடைபெறும் என கூறப்படுகிறது. சரத்பவார், ராம்தாஸ் அத்வாலேயுடனான இணக்கமான உறவை பயன்படுத்தி அவரை தங்கள் கூட்டணிக்குள் இழுத்துவிடுவார் என காங்கிரஸ் நம்புகிறது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், சரத்பவார், ராம்தாஸ் அத்வாலே இடையே நல்ல நட்பு உள்ளது, என்றார்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தேர்தலுக்கு முன் பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லாததால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது. எனினும் மராட்டியத்தில் நிலைமை வேறு மாதிரி இருப்பதால் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் கவனம் செலுத்தி வருகிறது.

மராட்டியத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிட்டன. அந்த தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story