நவிமும்பை தலோஜா ஜெயிலில் 400 கண்காணிப்பு கேமராக்கள் ஜெயில் சூப்பிரண்டு தகவல்


நவிமும்பை தலோஜா ஜெயிலில் 400 கண்காணிப்பு கேமராக்கள் ஜெயில் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 7 July 2018 4:45 AM IST (Updated: 7 July 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

நவிமும்பையில் உள்ள தலோஜா மத்திய ஜெயிலில் 400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக ஜெயில் சூப்பிரண்டு கூறினார்.

மும்பை, 

நவிமும்பையில் உள்ள தலோஜா மத்திய ஜெயிலில் 400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக ஜெயில் சூப்பிரண்டு கூறினார்.

தலோஜா ஜெயில்

நவிமும்பையில் உள்ள தலோஜாவில் 27 ஹெக்டேர் பரப்பளவில் மத்திய ஜெயில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்து 562 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவர். தற்போது தலோஜா ஜெயில் வளாகத்தில் 74 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கைதிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் தலோஜா ஜெயிலில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

400 கேமராக்கள்

இதுகுறித்து தலோஜா ஜெயில் சூப்பிரண்டு சதானந்தா கெய்க்வாட் கூறியதாவது:-

தலோஜா ஜெயிலில் அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது 400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. 3 கட்டங்களாக கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story