சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு


சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
x
தினத்தந்தி 6 July 2018 10:00 PM GMT (Updated: 7 July 2018 12:05 AM GMT)

பூதலூர் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து சட்ட விரோதமாக பெறப்பட்ட குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தர விட்டார். இதற்காக தாலுகா அளவில் தாசில்தார்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டது.

இதன்படி பூதலூர் பகுதியில் தாசில்தார் இளங்கோ, குடிநீர்வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் சுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று ஒரே நாளில் பூதலூர், கோவில்பத்து ஊராட்சிகளில் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் இருந்து சட்டவிரோதமாக வீடுகளுக்கு இணைப்பு பெற்று பயன்படு்த்தி வந்த 12 பேரின் குடிநீர் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தால் இணைப்புகள் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story