அறியாமல் நாம் உண்ணும் பிளாஸ்டிக்!
பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் குறித்து தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.
நம்மை அறியாமலே நாம் எவ்வளவு ‘பிளாஸ்டிக்’கை உட்கொண்டு வருகிறோம் என்று ஓர் ஆய்வு எச்சரிக்கிறது.
அதாவது, 5 மி.மீ. முதல் 100 நானோ மீட்டர் அளவிலான பிளாஸ்டிக் துணுக்குகளை நாம் உட்கொள்கிறோமாம்.
உணவுச்சங்கிலி மூலமாக இந்த பிளாஸ்டிக் துணுக்குள் நம் குடலை அடைகின்றன.
எடுத்துக்காட்டாக, கடல் மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் நிலை உண்டாகியிருக்கிறது. அந்த மீன்களை நாம் உண்ணும்போது நமக்குள்ளும் பிளாஸ்டிக் துணுக்குகள் செல்கின்றன.
அதேபோல ஒரு கிலோ கடல் உப்பில் 600 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதுவும் நமக்குள்தான் செல்கிறது.
பிளாஸ்டிக் பிரச்சினைகளுக்கு எல்லையே இல்லை போல!

Related Tags :
Next Story