தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பிதற்றி வருகிறார் அமைச்சர் பேட்டி


தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பிதற்றி வருகிறார் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 8 July 2018 4:15 AM IST (Updated: 8 July 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தீவிர வாதம், பயங்கரவாதம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பிதற்றி வருகிறார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.53 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள கட்சிகள் மீது பயம் ஏற்பட்டுள்ளதால், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தீவிரவாதம், பயங்கரவாதம் என பிதற்றி வருகிறார். தமிழகத்தில், தீவிரவாதம் எங்கு இருக்கிறது? என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும்.

இந்தியாவிலேயே அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இங்கு தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story