வார்தா புயல் பாதிப்பை ஈடு செய்ய சென்னை நகரில் புதிய மரங்களை நடுவதற்கு ஏற்பாடு
வார்தா புயலினால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் புதிய மரங்களை நடுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் வர்தா புயலின் போது ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனை சரி செய்யும் வகையில், சென்னையில் மண்ணுக்கேற்ற மர வகைகளை நட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் கீழ், ‘கேர் எர்த் டிரஸ்ட்’ என்ற அமைப்பு மூலம் மண்ணின் தன்மை, தட்பவெப்ப நிலை, நீரின் தரம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து அதற்கேற்ற மரவகைகளின் விவரங்களுடன் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஒரு ஆண்டுக்கு 23 ஆயிரம் மரங்கள் நட்டு, அதனை பராமரிக்க ரூ.5.29 கோடி செலவாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மரங்கள் நடும் பணி அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்படும். இதுவரை 14 ஆயிரத்து 740 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story