ஒட்டன்சத்திரம், கணக்கன்பட்டியில் ரூ.1 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
ஒட்டன்சத்திரம், கணக்கன்பட்டியில் ரூ.1 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
பழனி,
திண்டுக்கல்-பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஓடைப்பகுதிகளை இணைக்கும் வகையில் தரைப்பாலங்கள் அமைக் கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் பகுதி மற்றும் பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் ரூ.1 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.
கணக்கன்பட்டி பகுதியில் எரமநாயக்கன்பட்டி ஓடைக்கு தண்ணீர் செல்லும் வகையில் சாலையின் குறுக்காக தரைப்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்காத வகையில், முதற்கட்டமாக சாலையில் பள்ளம் தோண்டி கான்கிரீட் தடுப்புகள் அமைக் கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஒட்டன்சத்திரம் மற்றும் கணக்கன்பட்டியில் தரைப்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விபத்துகள் ஏற்படாத வகையில் இந்த பாலங்கள் அமைக்கப்படும். பாலம் அமைக்கும் வேலைகள் ஒருபுறம் நடந்தாலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திண்டுக்கல்-பழனி சாலையில் இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் பிரதான சாலையிலேயே வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story