ஜூகு கடலில் மூழ்கிய 4-வது வாலிபரின் உடலும் மீட்பு


ஜூகு கடலில் மூழ்கிய 4-வது வாலிபரின் உடலும் மீட்பு
x
தினத்தந்தி 8 July 2018 4:45 AM IST (Updated: 8 July 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஜூகு கடலில் மூழ்கி பலியான 4-வது வாலிபரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

மும்பை, 

ஜூகு கடலில் மூழ்கி பலியான 4-வது வாலிபரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய வாலிபர்கள்

மும்பை அந்தேரி டி.என். நகர் பகுதியை சேர்ந்தவர் வாசிம் கான் (வயது17). இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த பர்தீன் சவுதாகர்(17), பைசல்(16), சோகைல்(17) மற்றும் நசீர் காஜி(22). இவர்கள் 5 பேரும் கடந்த வியாழக்கிழமை மாலை ஜூகு கடற்கரைக்கு சென்றனர். இதில், அவர்கள் அங்கு குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினர்.

வாசிம் கான் மட்டும் கடற்கரையில் பணியில் இருந்த உயிர்காக்கும் வீரர்களால் உயிருடன் மீட்கப்பட்டார்.

4 உடல்களும் மீட்பு

மற்ற 4 பேரும் கடலில் மூழ்கி மாயமாகினர். இதில், கடந்த வியாழக்கிழமை இரவு நசீர் காஜி பிணமாக மீட்கப்பட்டார். நேற்று முன்தினம் பர்தீன் சவுதாகர், சோகைல் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. பைசலின் உடலை தேடும் பணி நடந்து வந்தது.

இந்தநிலையில் அவரது உடல் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் ஜூகுவில் உள்ள ஜே.டபிள்யு. ஓட்டல் அருகே கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடலில் மூழ்கிய 4 வாலிபர்களின் உடல்களும் மீட்கப்பட்டதால் தேடுதல் பணி முடித்து கொள்ளப்பட்டதாக கடலோர காவல்படை செய்தி தொடர்பாளர் கூறினார்.

Next Story