பெரம்பூரில் மாநகராட்சிக்கு தொழில் வரி செலுத்தாத 5 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்
பெரம்பூர் பகுதியில் 5 கடைகளுக்கு நேற்று காலை சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
பெரம்பூர்,
மாநகராட்சிக்கு தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் பெறாத வர்த்தக நிறுவனங்கள், கடைகள் தண்டையார்பேட்டை மண்டலத்தில் இயங்கி வருவதாக வந்த புகாரின்பேரில் மண்டல அதிகாரி அனிதா உத்தரவின்பேரில் பெரம்பூர் பகுதியில் உள்ள கடைகள் வர்த்தக நிறுவனங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் தொழில் உரிமம் பெறாத, புதுப்பிக்காத மற்றும் வரி செலுத்தத நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உதவி வருவாய் அதிகாரிகள் பிரகாஷ் மற்றும் சூரியபானு தலைமையில் உரிமம் ஆய்வாளர்கள் பார்த்தசாரதி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் அறிவிப்பு மற்றும் இறுதி நோட்டீஸ் வழங்கினர்.
இதையும் மீறி பெரம்பூர் பகுதியில் வரி செலுத்தமாலும் உரிமம் பெறாமலும் இருந்து வந்த துணிக்கடை, மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனம், பேக்கரி மற்றும் மளிகைக்கடை உள்பட 5 கடைகளுக்கு நேற்று காலை சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர். முன்னதாக கடையில் இருந்த வேலையாட் கள் வெளியேற்றபட்டு கடையில் இருந்த மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு கடையை பூட்டி சீல் வைத்தனர்.
அப்போது கடை உரிமையாளர்கள் சீல் வைக்கவந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Related Tags :
Next Story