வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த கார் தீப்பிடித்து எரிந்து நாசம்


வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த கார் தீப்பிடித்து எரிந்து நாசம்
x
தினத்தந்தி 8 July 2018 5:18 AM IST (Updated: 8 July 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

பூந்தமல்லி,

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 66). இவரது மனைவி உஷா. இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு அவ்வை திரு நகர், 4-வது தெருவில் வசித்து வரும் உறவினர் வீட்டிற்கு காரில் வந்தனர். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் காரில் வெளியே சென்று விட்டு காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தினர்.

நேற்று அதிகாலை அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டனர். உடனே வெளியே வந்த சதாசிவம் கார் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோயம்பேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். எனினும் கார் தீயில் எரிந்து நாசம் ஆனது.

இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கார் தீப்பிடித்து எரிந்ததற்கு நாசவேலை காரணமா? என்பது பற்றிபோலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story