மாவட்ட செய்திகள்

தனுஷ்கோடி அருகே ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை, கடைகள் எரிந்து சாம்பல் + "||" + At the hotel near Dhanushkodi Kia's cylinder exploded cottage, shops burned gray

தனுஷ்கோடி அருகே ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை, கடைகள் எரிந்து சாம்பல்

தனுஷ்கோடி அருகே ஓட்டலில்
கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை, கடைகள் எரிந்து சாம்பல்
தனுஷ்கோடி அருகே ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசை, கடைகள் எரிந்து சாம்பலாகின.

ராமேசுவரம்,

தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் உமையனன் மகன் தரைக்குடியான் என்பவர் குடிசை அமைத்துள்ளார். இதில் ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி அதிஷ்டம் ஆகியோர் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சாப்பாடு சமைத்து விட்டு அதிஷ்டம் வெளியே வந்துள்ளார்.


அப்போது திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியது. இதில் ஓட்டல் இருந்த குடிசை மற்றும் அதன் அருகில் சுப்பிரமணியன் மனைவி பாக்கியம், சரவணன் மனைவி சாரதா தேவி ஆகியோரின் பெட்டிக்கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

குடிசை தீப்பற்றி எரிவதை கண்ட அதிஷ்டம் உள்பட 2 பேர் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ்கோடியில் மணல் திட்டுக்கு இடம்பெயரும் பறவைகள்
தனுஷ்கோடியில் மணல் திட்டுக்கு பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
2. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடல் கொந்தளிப்பால் சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைப்பு
கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
3. ஆக்ரோஷமான அலைகளால் தனுஷ்கோடியில் கரையை நெருங்கி வந்த கடல்
ஆக்ரோஷமான அலைகளால் கரையை கடல் நெருங்கி வந்தது போன்று மாறியது. இதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்போன்களில் படம் பிடித்துக்கொண்டனர்.
4. தனுஷ்கோடி பகுதியில் பலத்த கடல் கொந்தளிப்பு
தனுஷ்கோடி பகுதியில் பலத்த கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சூறாவளி காற்றால் தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது.
5. கடல் கொந்தளிப்பு காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை
கடல் கொந்தளிப்பு காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.