மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு + "||" + Death of a fallen young man from motorbike

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
மேலநெடுவாய் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி பிரபு கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே காங்குழி கிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 29). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஆண்டிமடம் வந்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மேலநெடுவாய் கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி பிரபு கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.