மாவட்ட செய்திகள்

கீழப்பழுவூர், திருமானூரில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் + "||" + DMK in Thanamuroor Street proclamation meeting

கீழப்பழுவூர், திருமானூரில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

கீழப்பழுவூர், திருமானூரில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
அரியலூர் மாவட்டம், கீழப் பழுவூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், கீழப் பழுவூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் (மேற்கு) அசோகசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராஜன் முன்னிலை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் முருகேசன் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாசந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் தனபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கவிதை பித்தன் பங்கேற்று பேசினார். இதில் துணை அமைப்பாளர் முத்தையா பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல் திருமானூரில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) கென்னடி தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இலக்கியதாசன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் கவிதை பித்தன் சிறப்புரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரேஷன், ஆதார் கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு
புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் ரேஷன், ஆதார் கார்டு போன்றவற்றை ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்
காரைக்காலில் ‘கஜா’ புயலை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படவேண்டும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
3. தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி, கமலை கருதவில்லை முன்னாள் எம்.பி. சுப்பராயன் பேட்டி
தமிழகத்தின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக ரஜினி மற்றும் கமலை கருதவில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
4. குமரி மாவட்டத்தில் 100 செல்போன் கோபுரங்கள் விரைவில் அமைக்கப்படும்
குமரி மாவட்டத்தில் 100 செல்போன் கோபுரங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று தொலைபேசி ஆலோசனைக்குழு கூட்டத்தில் விஜயகுமார் எம்.பி. கூறினார்.
5. பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது
பன்றி காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடந்தது.