தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் இருந்து 6 சிறுத்தைகள் அகமதாபாத் மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது


தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் இருந்து 6 சிறுத்தைகள் அகமதாபாத் மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 9 July 2018 3:45 AM IST (Updated: 9 July 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் இருந்து 6 சிறுத்தைகள் அகமதாபாத் மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிவமொக்கா, 

தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் இருந்து 6 சிறுத்தைகள் அகமதாபாத் மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தாவரேகொப்பா உயிரியல் பூங்கா

சிவமொக்கா புறநகர் பகுதியில் தாவரேகொப்பா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. திறந்தவெளியில் அமைந்துள்ள இந்த பூங்கா சிங்கங்கள், புலிகள் பாதுகாப்பு சரணாலயமாக உள்ளது. இங்கு சிங்கங்கள், புலிகளை தவிர சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த உயிரியல் பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பூங்காவில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளதால், வேறு மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் மிருகக்காட்சி சாலையில் சிறுத்தைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் இருந்து அகமதாபாத் மிருகக்காட்சி சாலைக்கு சிறுத்தைகள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

6 சிறுத்தைகள் அனுப்பி வைக்கப்பட்டன

அதன்படி நேற்று காலை தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் இருந்து 6 சிறுத்தைகள் கூண்டில் அடைக்கப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு குஜராத் அகமதாபாத் கமலா நேரு மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தாவரேகொப்பா மிருகக்காட்சி சாலை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குஜராத் மாநிலம் அகமதாபாத் மிருகக்காட்சி சாலையில் சிறுத்தைகள் குறைவாக இருப்பதாக தகவல் வந்தது. அதன்படி, தாவரேகொப்பா உயிரியல் பூங்காவில் இருந்து 6 சிறுத்தைகள் லாரிகள் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கமலா நேரு மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story