மாவட்ட செய்திகள்

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு + "||" + School student dies in drowning pool

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பழைய ரெயில் நிலையம், அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டம். இவரது மகன் செல்வம் (வயது 14). பூக்கடை சத்திரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் பள்ளி மாணவன் செல்வம் காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள குளத்தில் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தான்.அப்போது, அதிக ஆழத்தில் சென்ற செல்வம் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சையதுமுகமதுஷா உத்தரவின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மாணவன் செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.