மாவட்ட செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெயிண்டர் பலி + "||" + Near uttukkottai Collision with motorcycles; Painter kills

ஊத்துக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெயிண்டர் பலி

ஊத்துக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெயிண்டர் பலி
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெயிண்டர் பலியானார்.
ஊத்துக்கோட்டை,


ஊத்துக்கோட்டை அருகே உள்ள அழகிரிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 27). பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் சத்யா ( 27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பெரியபாளையம் சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.


ஊத்துக்கோட்டை அருகே செஞ்சிகரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஊத்துக்கோட்டை பேரூராட்சி கலைஞர்நகர் கொய்யாதோப்பு பகுதியை சேர்ந்த பிரசன்னா (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் ராமராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இதில் தூக்கி வீசப்பட்ட ராமராஜ், சத்யா, பிரசன்னா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் ராமராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த சத்யா, பிரசன்னா ஆகியோரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் ராமராஜின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்.