பனவடலிசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி


பனவடலிசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 9 July 2018 4:15 AM IST (Updated: 9 July 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

பனவடலிசத்திரம், 

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:- 

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் அக்ரகாரதெருவை சேர்ந்தவர் பாலையா. இவருடைய மனைவி மல்லிகா (வயது 48). இவர்களுக்கு கோபி, காளிராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் வெளியூரில் உள்ளனர். இதனால் பாலையா, மல்லிகா மட்டும் ஊரில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மல்லிகா நேற்று வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டு இருந்தார். அப்போது, திடீரென்று அவர் மீது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மல்லிகாவை மீட்டு, சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மல்லிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story