தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் 5 வருடங்கள் தேவை பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் 5 வருடங்கள் தேவை என பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மும்பை,
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் 5 வருடங்கள் தேவை என பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி, தங்களது தேர்தல் பிரசாரத்தின்போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தநிலையில் மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜனதா கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.யும், பொருளாதார வல்லுனருமான சுப்பிரமணியசுவாமி கூறியதாவது:-
மேலும் 5 ஆண்டுகள்
நாடாளுமன்ற தேர்தலின்போது நாங்கள்(பா.ஜனதா) கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என ஒருபோதும் கூற மாட்டேன். ஆனால் அந்த வாக்குறுதிகளுக்கு மரியாதை செலுத்த தொடங்கி இருக்கிறோம். நாங்கள் ஆரம்பித்த பணிகளை நிறைவேற்ற மேலும் 5 ஆண்டுகள் தேவைப்படும்.
நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலைமையில் இல்லை. ஆனால் பொருளாதார மேம்பாடுகள் வாக்குகளை கவர்வதில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ‘ஜொலிக்கும் இந்தியா’ என்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அது தோல்வியில்தான் முடிந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா கட்சி ‘இந்துத்வா’ கொள்கைகள் மற்றும் ஊழலற்ற அரசாங்கம் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. இதனால்தான் 2014-ம் ஆண்டு பா.ஜனதா அதிக தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதாவுக்கு ‘இந்துத்வா’ கொள்கைகள் உதவிகரமாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story