மான்கூர்டில் பரிதாபம் மின்சாரம் தாக்கி பெண் சாவு மகளை காப்பாற்ற முயன்றபோது துயரம்


மான்கூர்டில் பரிதாபம் மின்சாரம் தாக்கி பெண் சாவு மகளை காப்பாற்ற முயன்றபோது துயரம்
x
தினத்தந்தி 9 July 2018 4:30 AM IST (Updated: 9 July 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

மான்கூர்டில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். மின்சாரம் தாக்கிய தனது மகளை காப்பாற்ற முயன்றபோது உயிரை இழந்தார்.

மும்பை, 

மான்கூர்டில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். மின்சாரம் தாக்கிய தனது மகளை காப்பாற்ற முயன்றபோது உயிரை இழந்தார்.

மின்சாரம் தாக்கியது

மும்பை மான்கூர்டு பி.எம்.ஜி.பி. காலனி பகுதியை சேர்ந்த சிறுமி சமிதா (வயது5). இச்சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடி ெகாண்டிருந்தாள். அப்போது, அங்கிருந்த இரும்பு ஏணியில் மின்வயர் ஒன்று அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

இது தெரியாமல் சிறுமி அந்த ஏணியை பிடித்து விட்டாள். இதில் அவள் மீது மின்சாரம் பாய்ந்தது. இனால் வலி தாக்க முடியாமல் சிறுமி அலறினாள். சத்தம் கேட்டதும் அவளின் தாயும், தந்தையும் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். மகள் மீது மின்சாரம் பாய்வதை அறிந்து கொண்ட தந்தை சாதுர்யமாக உருட்டு கட்டை மூலம் சிறுமியின் கையை அந்த ஏணியில் இருந்து விளக்கி காப்பாற்றினார்.

தாய் சாவு

இதற்கிடையே அங்கு வந்தசிறுமியின் தாய் பதற்றத்தில் அந்த ஏணியை பிடித்து விட்டார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story