அந்தியூர் எண்ணமங்கலத்தில் குரங்குகளை பிடிக்க வைத்த கூண்டுக்குள் நாய் சிக்கியது


அந்தியூர் எண்ணமங்கலத்தில் குரங்குகளை பிடிக்க வைத்த கூண்டுக்குள் நாய் சிக்கியது
x
தினத்தந்தி 8 July 2018 11:50 PM GMT (Updated: 8 July 2018 11:50 PM GMT)

அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன.இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடம் அருகே கூண்டு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கூண்டுக்குள் நாய் ஒன்று நேற்று முன்தினம் மாலை திடீரென சென்று விட்டது.


அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் குரங்குகள் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறையின் ஓடுகளை உடைத்து வந்தன. மேலும் மாணவ-மாணவிகளின் மதிய உணவுகளை பிடுங்கி சாப்பிட்டு தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. இதனால் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் பள்ளிக்கூடம் அருகே இரும்பினால் ஆன கூண்டு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கூண்டுக்குள் குரங்குகள் உண்ணும் பழவகைகள் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கூண்டுக்குள் நாய் ஒன்று நேற்று முன்தினம் மாலை திடீரென சென்று விட்டது. இதில் அந்த நாய் வெளியே வர முடியாமல் வசமாக கூண்டுக்குள் சிக்கிக்கொண்டது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கூண்டுக்குள் இருந்த நாயை மீட்டனர். குரங்குகளை பிடிக்க வைத்த கூண்டுக்குள் நாய் சிக்கியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story