மும்பையில் 15-ந் தேதி முதல் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி மாநகராட்சி அதிகாரி தகவல்
விநாயகர் சதுர்த்தியையொட்டி நகரில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு வருகிற 15-ந் தேதி முதல் மண்டல்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
மும்பை,
விநாயகர் சதுர்த்தியையொட்டி நகரில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு வருகிற 15-ந் தேதி முதல் மண்டல்களுக்கு அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி
நாட்டின் நிதி நகரமான மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இதையொட்டி வீதிகளில் ஆயிரக்கணக்கில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். வீடுகளிலும் மக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி தொடங்குகிறது.
இதையொட்டி விநாயகர் சிலைகளை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்வதற்கு மாநகராட்சியிடம் அனுமதி கேட்டு மண்டல்கள் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.
15-ந் தேதி முதல் அனுமதி
இதுவரைக்கு மாநகராட்சிக்கு சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விநாயகர் சிலைகளை நகருக்குள் ஒரு மாதத்துக்கு முன்னரே கொண்டு வருவதற்காக மண்டல்கள் சார்பில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விநாயகர் மண்டல்களுக்கு வருகிற 15-ந் தேதி முதல் அனுமதி வழங்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story