சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா நெல்லை மாவட்டத்துக்கு 27-ந் தேதி உள்ளுர் விடுமுறை
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந் தேதி சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் விடுமுறையன்று மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசு காப்புகள் தொடர்பான அவசர பணிகளை கவனிப்பதற்கு குறைந்த பட்ச பணியாளர்களைக் கொண்டு செயல்படும். கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவைகளில் நடைபெறும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவகையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story