மாவட்ட செய்திகள்

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியல் + "||" + Encourage 26 feature requests Rural development Road blockade

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியல்

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறையினர் சாலை மறியல்
26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல், 

ஊராட்சி செயலாளர் களுக்கு பதிவுறு எழுத்தர் களுக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதையும், விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதையும் நிரந்தரமாக நிறுத்த உத்தரவிட வேண்டும். காலிப்பணியிடங்களை வெளியிட வேண்டும்.

கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த ஊதியத்தில் ரூ.60 பிடித்தம் செய்ய வேண்டும். மேலும், அவர் களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி முதல் ஊரக வளர்ச்சித்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊரக வளர்ச்சி துறையினர் பேரணியை தொடங்கினர். இதற்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் சுமதி தலைமை தாங்கினார்.


முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராமமூர்த்தி பேரணியை தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வீரகடம்புகோபு, மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதையடுத்து பேரணியாக வந்த அவர்கள் பஸ்நிலையத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர், ஒய்.எம்.ஆர். பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...