கடற்படையில் அலுவலக வேலைகள்
இந்திய கடற்படையில் தீயணைப்பு வீரர் போன்ற பணிகளுக்காக 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்திய கடற்படையில் அந்தமான் நிகோபர் கமாண்டிங் பிரிவில் மாஸ்டர், என்ஜின் டிரைவர், லஸ்கர், கிரெஸ்ஸர், தீயணைப்பு வீரர் போன்ற பணிகளுக்காக 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக லஸ்கர் பணிக்கு 52 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஏ4 காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரித்து நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகள் இணைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அறிவிப்பில் இருந்து 45 நாட்களுக்குள் The Admiral Superintendent {for Manager Personnel}, Naval Dockyard, Visakhapatnam 530014 என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு 30-6-2018 அன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விரிவான விவரங்களை www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story