ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை
ரிசர்வ் வங்கியில் 166 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
வங்கிகளின் வங்கி எனப்படுவது ரிசர்வ் வங்கி. இந்த வங்கியில் அதிகாரியாக பணிவாய்ப்பை பெறுவது இளைஞர்கள் பலரின் கனவாக இருக்கிறது. தற்போது இந்த வங்கியில் கிரேடு-பி, தரத்திலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 166 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2018-ந் தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
இளநிலை பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. சில பிரிவு பணிகளுக்கு அனுபவம் அவசியம்.
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.850-ம், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 23-7-2018-ந் தேதியாகும். இந்த பணிகளுக்கான பேஸ் 1 தேர்வு ஆகஸ்டு 16-ந் தேதியும், பேஸ்2 தேர்வு, செப்டம்பர் 6, 7-ந் தேதிகளிலும் நடக்கிறது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் https://www.rbi.org.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.
Related Tags :
Next Story