சுரங்க நிறுவனத்தில் 528 பணியிடங்கள்


சுரங்க நிறுவனத்தில் 528 பணியிடங்கள்
x
தினத்தந்தி 10 July 2018 10:18 AM GMT (Updated: 10 July 2018 10:18 AM GMT)

கோல் இந்தியா சுரங்க நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு 528 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று கோல் இந்தியா. சுரங்கத்துறை நிறுவனமான இதில் தற்போது சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட்/மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட், சீனியர் மெடிக்கல் ஆபீசர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 528 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு 352 இடங்களும், சீனியர் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு 176 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணி விண்ணப்பதாரர்கள் 1-4-2018-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணி விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.பி.எஸ். படிப்புடன் முதுநிலை மருத்துவ படிப்பு, முதுநிலை டிப்ளமோ படிப்புகள், டி.என்.பி. படித்தவர்கள் சீனியர் மெடிக்கல் ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 28-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.coal.india.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

Next Story