எல்லைக் காவல் படையில் வேலை


எல்லைக் காவல் படையில் வேலை
x
தினத்தந்தி 10 July 2018 3:50 PM IST (Updated: 10 July 2018 3:50 PM IST)
t-max-icont-min-icon

எல்லைக் காவல் படையில் தொழில்நுட்ப பணிகளுக்கு 207 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.

எல்லைக் காவல் படை சுருக்கமாக பி.எஸ்.எப். எனப்படுகிறது. துணை ராணுவ படைப்பிரிவான இதில் தற்போது ‘குரூப்-சி’ பிரிவிலான தொழில்நுட்ப பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. வெகிகிள் மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரீசியன், வெல்டர், டர்னர், கார்பெண்டர், ஸ்டோர் கீப்பர், பெயிண்டர், வல்கனைஸ், பிட்டர், பிளாக்ஸ்மித் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணி வாரியாக உள்ள காலியிடங்கள் விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பணியிடங்கள் உள்ள ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவம் மற்றும் அனுமதி அட்டை படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அறிவிப்பில் இருந்து 30 நாட் களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜூன் 30- ஜூலை-6 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது. விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங் களை தெரிந்து கொள்ளவும் www.bsf.nic.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும். 

Next Story