வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராவார்


வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராவார்
x
தினத்தந்தி 11 July 2018 4:30 AM IST (Updated: 11 July 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராவார் என்று, திருக்குவளையில் கி.வீரமணி கூறினார்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் திருக்கு வளையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கீழையூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோவிந்தராசன், இல.மேகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரியசார்லஸ், ஊராட்சி அவைத்தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி இல.பழனியப்பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கி.வீரமணி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரியார் இறந்தபோது கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது தலைமை செயலாளரை அழைத்த கலைஞர் பெரியார் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என கூறினார். பெரியார் ஆட்சியில், பதவியில் இல்லை. எனவே அவருக்கு அரசு மரியாதை கொடுத்தால் ஆட்சிக்கு இடையூறு வரும் என தலைமை செயலாளர் கூறினார். இதை புரிந்துக்கொண்ட கலைஞர், ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை அரசு மரியாதை கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார். இவ்வாறு கூற துணிச்சல் கலைஞர் ஒருவருக்கு மட்டுமே உண்டு. மேலும், பெண்களுக்கு சொத்துக்களில் பங்கு உண்டு என சட்டம் கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சியில்தான். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட அவைத்தலைவர் மீனாட்சிசுந்தரம், திராவிடர் கழக பொதுசெயலாளர் ஜெயக்குமார், தி.மு.க.வை சேர்ந்த ராஜமூர்த்தி, நாகராஜன், சந்திரசேகரன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகா.குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story