மாவட்ட செய்திகள்

நிதித்துறை செயலாளர் நடவடிக்கையால் அமைச்சர் கந்தசாமி அதிருப்தி, சட்டசபையில் ஆவேசம் + "||" + The Finance Secretary's action Minister Kandasamy displeased

நிதித்துறை செயலாளர் நடவடிக்கையால் அமைச்சர் கந்தசாமி அதிருப்தி, சட்டசபையில் ஆவேசம்

நிதித்துறை செயலாளர் நடவடிக்கையால் அமைச்சர் கந்தசாமி அதிருப்தி, சட்டசபையில் ஆவேசம்
நிதித்துறை செயலாளரின் நடவடிக்கையினால் அதிருப்தியடைந்த அமைச்சர் கந்தசாமி சட்டசபையில் ஆவேசமாக பேசினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை கூட்டத்தில் சபாநாயகர் வைத்திலிங்கம் நேற்று கேள்வி நேரத்தை தொடங்கினார். அப்போது எழுந்த அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிதித்துறை செயலாளர் தொடர்பாக ஒரு பிரச்சினையை கிளப்பினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–

அன்பழகன்: புதுவை பட்ஜெட்டில் சிறப்புக்கூறு திட்டத்தின்கீழ் ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 சதவீத நிதி குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி பதில் அளிக்கும்போது, சிறப்புக்கூறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும், அதை பட்ஜெட்டில் சேர்க்க முதல்–அமைச்சர் கூறியதாகவும், ஆனால் நிதித்துறை செயலாளர் அதை புறக்கணித்துவிட்டார் என்றும் கூறினார். இதுதொடர்பாக நிதித்துறை செயலாளரிடம் விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் சபாநாயகர் அவரை தனது அறைக்கு அழைத்து விசாரிக்கவேண்டும்.

முதல்–அமைச்சர் நாராயணசாமி: துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டபோது சிறப்புக்கூறு நிதியாக 16 சதவீத நிதி ஒதுக்கப்பட்டது. துறை சம்பந்தமான மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் விரிவாக அதை கூறுவார். ஆதிதிராவிடர்களுக்கு 16 சதவீத நிதி வழங்குவதுதான் அமைச்சரவையின் முடிவு.

அமைச்சர் கந்தசாமி: சிறப்புக்கூறு நிதிக்கு முதல்–அமைச்சர் 16 சதவீத நிதியை ஒதுக்கினார். ஆனால் அதை நிதித்துறை செயலாளர் பட்ஜெட்டில் காட்டவில்லை. அவரை உங்கள் (சபாநாயகர்) அறைக்கு கூப்பிடுங்கள். அவருக்கு என்ன வானளாவிய அதிகாரமா உள்ளது?

தொடர்ந்து எழுந்த அன்பழகன் எம்.எல்.ஏ. நிதித்துறை செயலாளர் குறித்து பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் வைத்திலிங்கம், இப்போது எதுவும் முறைதவறி பேசவேண்டாம். மானியகோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசி முடிவெடுக்கலாம் என்று கூறி அடுத்த அலுவலுக்கு சென்றார்.தொடர்புடைய செய்திகள்

1. டி.டி.வி. தினகரனுக்கு மக்களை பற்றி எதுவும் தெரியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த டி.டி.வி.தினகரனுக்கு மக்களை பற்றி எதுவும் தெரியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
2. புதியதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர் காங்கிரசார் நாளை பதவியேற்பு - அமைச்சர் நமச்சிவாயம் அறிக்கை
புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர் காங்கிரசார் நாளை பதவியேற்க உள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
3. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வராதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வராதது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
4. எம்.ஜி.ஆர். தந்த இயக்கம் ‘‘அ.தி.மு.க.வுக்கு என்றும் அழிவு கிடையாது" அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
‘‘எம்.ஜி.ஆர்.தந்த இயக்கமான அ.தி.மு.க.வுக்கு என்றும் அழிவு கிடையாது“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினா
5. அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.