மாவட்ட செய்திகள்

நவிமும்பையில், தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி பள்ளத்தில் பாய்ந்தது + "||" + In navimumpai, The carrier landed in the dungeon lorry

நவிமும்பையில், தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி பள்ளத்தில் பாய்ந்தது

நவிமும்பையில், தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி பள்ளத்தில் பாய்ந்தது
நவிமும்பையில் தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி மின் வினியோக நிறுவன கட்டிடத்தின் மேல் விழுந்தது.
மும்பை,

நவிமும்பை சி.பி.டி. பேலாப்பூர் 25-வது செக்டர் பகுதியில் நேற்று காலை மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது கன்டெய்னர் லாரி ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்தது. எக்தா விகார் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கன்டெய்னர் லாரி தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.


பாய்ந்த வேகத்தில் அந்த லாரி, அங்குள்ள மின்வினியோக நிறுவனத்தின் ஒரு கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரையில் வந்து விழுந்தது. இதில் லாரியில் இருந்து கன்டெய்னர் தனியாக பிரிந்தது.

இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் காயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மின்வினியோக நிறுவன கட்டிடத்தின் மேல் விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் 23-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை
மும்பையில் 23-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
2. மும்பையில் தத்து எடுக்கப்பட்ட சிறுவன் நெதர்லாந்து நாட்டின் போலீஸ் அதிகாரியாக உயர்ந்தார்
மும்பை டோங்கிரி காப்பகத்தில் தத்து எடுக்கப்பட்ட சிறுவன் இன்று நெதர்லாந்து நாட்டின் போலீஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார். அவர் பழைய நினைவுகளை மறக்காமல் டோங்கிரி காப்பக குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.
3. மும்பை, கேரளா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மும்பை, கேரளா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் கவிழ்ந்து 2 பேர் பலி
ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
5. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா உயர்வு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா உயர்வடைந்து 71.68 ஆக உள்ளது.