மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் + "||" + Banned 1½ ton tobacco products

தடை செய்யப்பட்ட 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
நத்தம் அருகே வாகன சோதனையின் போது, தடை செய்யப்பட்ட 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார்-சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
நத்தம், 

மதுரையில் இருந்து நத்தத்துக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் நத்தம் ராக்காச்சிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சரக்கு வேன் மற்றும் கார் முன்னும், பின்னுமாக வேகமாக வந்தன. இதையடுத்து அவற்றை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது 2 வாகனங்களில் வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 வாகனங்களிலும் சோதனை செய்தனர். அப்போது மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் 15 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் சரக்கு வேன் டிரைவர் நத்தத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 26), கார் டிரைவர் நவாஸ்கான் (31) என்பதும், மதுரையில் இருந்து நத்தத்துக்கு புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனும், காரும் பறிமுதல் செய்யப்பட்டன. 


தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்குபாளையத்தில்: 830 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தெலுங்குபாளையத்தில் உள்ள குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 830 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
2. புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபர் கைது: 7 மூட்டைகள் பறிமுதல்
திண்டுக்கலில் புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து 7 மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
3. திருப்பூரில், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: ரூ.2 லட்சம் பட்டாசுகள் சிக்கின
திருப்பூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4. தேனியில் 125 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தேனியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்து இருந்த 125 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. புகையிலை பொருட்களை பதுக்கி வைக்க போலீஸ் ஏட்டு உதவி?
தேனி அருகே 480 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், அவற்றை பதுக்கி வைத்த வீட்டை போலீஸ் ஏட்டு ஒருவர் வாடகைக்கு பிடித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை