மாவட்ட செய்திகள்

7 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக 69 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை + "||" + A total of 69 polling booths in seven assembly constituencies are nominated by the Election Commission

7 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக 69 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை

7 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக 69 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை
7 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக 69 வாக்குச்சாவடிகளை உருவாக்க தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.
திண்டுக்கல், 


2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 தொகுதிகளுக் கான வாக்குச்சாவடி வரைவு பட்டியல் கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதில் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 39 வாக்குச்சாவடிகள் இருந்தன. மேலும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் புதிதாக சில வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக வாக்குச்சாவடிகளின் பட்டியல் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன.

மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் களஆய்வும் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். அப்போது வாக்குச்சாவடிகளை பிரித்தல், புதிதாக உருவாக்குதல் குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வாக்குச்சாவடிகளை புதிதாக உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் 69 வாக்குச்சாவடிகளை புதிதாக உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாறுதல் செய்யவும், 14 வாக்குச்சாவடிகளை வேறுகட்டிடத்துக்கு மாற்றவும், 50 வாக்குச்சாவடிகளின் பெயர் களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

அதேபோல் 23 வாக்குச்சாவடிகளை சேர்ந்த பகுதிகளில் இருந்து சில பகுதிகளை பிரித்து பிற வாக்குச்சாவடிகளில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.